ஊழலுக்கு எதிரான நடவடிக்கை - வவுனியா மாநகர சபை முதல்வர் பதவி நீக்கம் தொடர்பில் விமர்சனம்
ஊழல் குற்றங்களுக்கு எதிராக வவுனியா மாநகர சபை முதல்வரின் பதவி நீக்கம் பாராட்டுக்குரியது என நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் பதவி நீக்கம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாநகர சபை முதல்வரின் பதவி நீக்கமானது எந்தவொரு தன்னிச்சையான முடிவும் அல்ல. அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு, அவை உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே ஆளுநர் இந்தத் துணிச்சலான முடிவை எடுத்துள்ளார்.
வவுனியா மாநகர சபை முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன் பதவி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு, கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊழல் குற்றங்கள்
மேலும் ஊழல் அற்ற நிர்வாகமே மக்களின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற ஆளுநர் மேற்கொண்டுள்ள இந்தச் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தற்போதைய அரசாங்கம் ஊழல்வாதிகளை இனம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.
இவ்வாறான சூழலில் உண்மையை மறைத்துவிட்டு எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் பொய்யான கருத்துக்களை முன்வைப்பது மிகுந்த கவலைக்குரியது.
ஊழலுக்கு எதிரான ஆளுநரின் இந்தச் சீர்திருத்த நடவடிக்கை வவுனியா மாநகர சபையின் நிர்வாகச் செயல்பாடுகளில் ஒரு முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகின்றது என்றார்.
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam