வவுனியா நகரசபையின் 2022ம் ஆண்டு வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்
வவுனியா நகரசபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வவுனியா நகரசபை அமர்வு இன்று (16) காலை 09.30 மணிக்கு வவுனியா நகரசபையில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை நகரசபை தலைவர் இ.கௌதமன் முன்வைத்திருந்தார். இதன் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் தனுஸ்காந் எதிர்த்து வாக்களித்த நிலையில் ஏனைய 18 உறுப்பினர்களின் ஆதரவுடன் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதன் போது 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை நகரசபை உறுப்பினர் எம்.லரீப் முன்மொழிய, உபதலைவர் குமாரசாமி வழி மொழிந்திருந்தார்.
இப்பாதீட்டில் 10 வட்டாரங்களிற்கு தலா 3.5 மில்லியன் ரூபா வீதம் ஒதுக்கப்பட்டதுடன், வட்டார பராமரிப்பு, வருமான மேம்பாடு, திண்மக்கழிவு முகாமைத்துவதும், பொதுவிடயங்கள் உள்ளடங்களாக 86.32 மில்லியன் ரூபாவினை கொண்டமைந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சுதந்திர கட்சியின் நகரசபை உறுப்பினர் திருமதி த.புஞ்சிகுமாரி மரணமடைந்ததை தொடர்ந்து அவருக்கு பதிலாக பிறிதொரு உறுப்பினர் தெரிவு செய்யப்படாத நிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



ரஜினி சார் மீது இருக்கும் மரியாதைக்காக ஒதுங்குகிறேன்.. தனுஷ் ஓம் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு Cineulagam