வவுனியா - மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி: ஒருவர் படுகாயம்
வவுனியா - மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவமானது வவுனியா - மன்னார் வீதியில், பூவரசன்குளம், குருக்கள் புதுக்குளம் பகுதியில் இன்று (30.08.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி வந்த கூலர் ரக வாகனமும், வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி சென்ற மோட்டர் சைக்கிளும் பூவரசன்குளம், குருக்கள் புதுக்குளம் பகுதியில் பயணித்த போது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு இளைஞர் படுகாயடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பரமனாத் சிவாகரன் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளதுடன் 37 வயதுடைய செல்லத்துரை கிருஸ்னபாலமன் என்ற இளைஞர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக விசாரணைகளை பூவரசன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் திருவிழா





அரபு வர்த்தகர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட 450 ஆண்டுகள் பழமையான மரம்.., 40 பேர் தங்கலாம் News Lankasri

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
