வவுனியா - மன்னார் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞன் பலி
வவுனியா - பூவரசங்குளம், குருக்கள்புதுக்குளம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்துச் சம்பவம் இன்று(27.09.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
குருக்கள்புதுக்குளம் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய செல்வகுமார் சர்மிளன் என்ற இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்துச் சம்பவம்
வவுனியா, குருக்கள்புதுக்குளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்ததுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும், இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 2 நாட்கள் முன்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
