யாழில் கடத்தி வைத்து சித்திரவதை செய்யப்பட்ட நபர்! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

Vavuniya Sri Lanka Sri Lankan political crisis
By Theepan May 02, 2023 06:13 AM GMT
Report

வவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவரைக் கடத்தி வந்து வீடொன்றில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் 3 பெண்கள் உட்பட 11 பேர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வான் ஒன்றும் 3 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் யகத் விஷாந்த கீழ் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரே இந்த கைது நடவடிக்கையை நேற்றைய தினம் (01.05.2023) முன்னெடுத்துள்ளனர்.

யாழில் கடத்தி வைத்து சித்திரவதை செய்யப்பட்ட நபர்! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை | Vavuniya Man Kidnapped And Tortured

10 பேர் கொண்ட கும்பல்

வவுனியா - பூவரசம்குளம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய தில்லைநாதன் சுமணன் என்பவர் வெளிநாடு அனுப்புவதாகக் கூறி வேலணையைச் சேர்ந்த நபர்களிடம் 10 இலட்சம் ரூபா பணத்தை வாங்கியுள்ளார். எனினும் நீண்ட நாள்களாக வெளிநாடு அனுப்புவதற்கான நடவடிக்கையை அவர் எடுக்கவில்லை.

அவருக்குப் பணம் கொடுத்தமைக்கு எந்தவித ஆதாரமும் இல்லாததால் ஆதாரத்தை உருவாக்குவதற்காகக் குறித்த நபரைக் கடத்தி வந்துள்ளனர்.

நேற்றைய தினம் (01.05.2023) காலை முச்சக்கரவண்டி வாடகைக்கு வேண்டும் என்று கூறி இரண்டு இளம் பெண்கள் அவரை வரவழைத்துள்ளனர். அவர்கள் அழைத்த இடத்துக்குச் சென்ற போது முச்சக்கர வண்டியை அங்குக் கைவிட்டு 10 பேர் கொண்ட கும்பல் அவரை அடித்து வான் ஒன்றில் ஏற்றி யாழ்ப்பாணத்துக்குக் கடத்தி வந்துள்ளது.

அந்த கும்பல் கொக்குவில் தாவடி எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக உள்ள வீட்டில் அடைத்து வைத்து மிரட்டி 10 இலட்சம் தர வேண்டும் என்ற கடிதம் ஒன்றை எழுதி வாங்கியுள்ளது.

யாழில் கடத்தி வைத்து சித்திரவதை செய்யப்பட்ட நபர்! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை | Vavuniya Man Kidnapped And Tortured

சுற்றி வளைத்த பொலிஸார்

நபர் ஒருவர் கடத்தி வரப்பட்டு சித்திரவதை இடம்பெறுவதாக யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் யரூரின் கட்டளைக்கு இணங்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. 

சம்பவம் இடம்பெற்ற வீட்டிலிருந்து அந்தக் கும்பல் வானில் மன்னார் செல்ல முற்பட்டுள்ளது. கும்பல் பயணித்த வான் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் கடமையில் நின்ற போக்குவரத்து பொலிஸின் உதவியுடன் வழிமறிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

தாங்கள் உறவினர் வீட்டுக்கு வந்ததாககவும் எவரையும் கடத்தி வரவில்லை என்றும் வானில் இருந்தவர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர். 

யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் வாகனத்தைக் கொண்டு சென்று கொக்குவில் தாவடி பகுதியில் உள்ள வீட்டை பொலிஸ் அதிரடிப் படையினரின் உதவியுடன் சுற்றி வளைத்தனர்.

யாழில் கடத்தி வைத்து சித்திரவதை செய்யப்பட்ட நபர்! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை | Vavuniya Man Kidnapped And Tortured

நீதிமன்றில் முன்னிலை

அந்த வீட்டில் கடத்தப்பட்டவர் அடிகாயங்களுடன் காணப்பட்டுள்ளார். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்த்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய 20, 29 மற்றும் 40 வயதுடைய பெண்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஹஏஎஸ் வான் ஒன்றும் 3 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டன.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

சந்தேக நபர்கள் இன்றைய தினம் (02.05.2023) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US