20 வருடங்களாக வசித்து வரும் காணியை வழங்குமாறு சிலர் அச்சுறுத்தல் விடுப்பதாக நபரொருவர் முறைப்பாடு
வவுனியா, மன்னார் வீதி ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள காணியில் இருந்து தன்னை எழும்பிச்செல்லுமாறு சிலர் மிரட்டுவதாக பூவரசங்குளம், பொலிஸ் நிலையத்தில் நபர் ஒருவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முறைப்பாட்டினை பதிவு செய்த நபர் தெரிவிக்கையில்,
எனது காணியில் இருந்து எழும்பி செல்லுமாறு சில நபர்கள் என்னை அச்சுறுத்துவதுடன்,காணியின் அரைவாசியையாவது பிரித்து அவர்களிற்கு வழங்குமாறு தெரிவிக்கின்றனர்.
இல்லாவிடில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்ததாக தெரிவித்து சிறையில் பிடித்து அடைக்கப்படுவாய் என்றும் அச்சுறுத்துகின்றனர்.
குறித்த காணியில் இருபது வருடங்களிற்கு மேலாக நான் வசித்து வருகின்றேன்.இது தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.


ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 12 நிமிடங்கள் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
