ஆலயச்சூழலில் இறந்த கோழிக்குஞ்சுகளை வீசிய விசமிகள்
வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தை அண்டிய பகுதியில் உயிரிழந்த கோழிக்குஞ்சுகளை வீசிச்சென்றுள்ளமையால் சுகாதார சீர்கேடான நிலைமை உருவாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள ஆலயத்திற்கு முன்பாகவுள்ள பள்ளத்தில் விசமிகள் சிலர் உயிரிழந்த நிலையில் காணப்படும் நூற்றுக்கணக்கான கோழிக்குஞ்சுகளை வீசிச் சென்றுள்ளனர்.
இதனால் அந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசிவருவதுடன், சுகாதார சீர்கேடான நிலைமை உருவாகியுள்ளது.
குறித்த பகுதிக்கு அருகில் சிறுவர் பூங்கா மற்றும் ஆலயம் அமைந்திருப்பதனால் அதிகமான பொதுமக்கள் சென்றுவரும் இடமாக அது காணப்படுகின்றது.
இந்நிலையில் இவ்வாறான நாசகார செயலை செய்தவர்கள் அடையாளம் காணப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri