வவுனியா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள்? வெளியான அதிர்ச்சி தகவல் (Photos)

Death Vavuniya Hospital Child babies
By Thileepan Feb 15, 2022 08:13 PM GMT
Report

வவுனியா வைத்தியசாலையில் கடந்த ஆண்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 46 குழந்தைகள் உட்பட 73 குழந்தைகள் மரணமடைந்துள்ளதுடன், 6 வருடங்களில் வைத்தியசாலையில் மோசமான நிலையை இது வெளிப்படுத்தியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கோரப்பட்ட வினாவிற்கு தற்போது மேற்படிப்புக்காக செல்லும் வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கே.ராகுலனின் பதவி முத்திரையுடன் பெறப்பட்ட தகவலிலேயே இவ் அதிர்ச்சி விபரம் வெளியாகியுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரை இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்பான விபரம் தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரால் கோரப்பட்டிருந்தது.

அதில் கடந்த 2015 ஆம் ஆண்டு 45 குழந்தைகளும், 2016 ஆம் ஆண்டு 47 குழந்தைகளும், 2017 ஆம் ஆண்டு 45 குழந்தைகளும், 2018 ஆம் ஆண்டு 58 குழந்தைகளும், 2019 ஆம் ஆண்டு 52 குழந்தைகளும், 2020 ஆம் ஆண்டு 48 குழந்தைகளும், 2021 ஆம் ஆண்டு 73 குழந்தைகளும் மரணமடைந்துள்ளனர்.

வவுனியா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள்? வெளியான அதிர்ச்சி தகவல் (Photos) | Vavuniya Hospital Death Child Babies

2021 ஆம் ஆண்டு குழந்தை பிறக்கும் முன் அல்லது பிறக்கும் போது விடுதி 5 இல் 8 குழந்தைகளும், விடுதி 7 இல் 16 குழந்தைகளும், குழந்தை பிறந்த பின் விடுதி 7 இல் 3 குழந்தைகளும், குழந்தைகளுக்கான விசேட அவசர சிகிச்சைப் பிரிவில் 46 குழந்தைகளுமாக 73 குழந்தைகள் மரணமடைந்துள்ளனர்.

கடந்த 6 வருடங்களில் அவசர சிகிச்சைப் பிரிவில் அதிகரித்த சிசு மரணமாக இது பதிவாகியுள்ளதுடன், மொத்த சிசு மரணங்களிலும் 2021 ஆம் ஆண்டே அதிக இறப்புக்கள் நிகழ்ந்துள்ளது.

சுகாதார, மருத்துவ துறையானது வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையிலும், வவுனியா வைத்தியசாலையில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையிலும் 73 குழந்தைகள் 12 மாதங்களில் இறந்துள்ளதுடன், பல்வேறு கனவுகளுடன் தமது பிள்ளைக்காக ஏங்கி இருந்த பல பெற்றோர் நடை பிணங்களாகவும், மன அழுத்தங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலைக்கு காரணம் என்ன? இதனை இந்த ஆண்டிலாவது கட்டுப்படுத்த வைத்தியசாலை நிர்வாகமும், சுகாதார அமைச்சும் நடவடிக்கை எடுக்குமா என்பதே பாதிக்கப்பட்ட பெற்றோரினதும், குழந்தை பிரசவத்திற்காக காத்திருக்கும் குடும்பங்களினதும் எதிர்பார்ப்பாகவுள்ளது.

மேலும், குழந்தை மரணமடைந்தமை தொடர்பில் சிலர் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக வழக்கு தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



Gallery
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US