வவுனியா விவசாயிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
நெற்செய்கையில் நெமடோட் என்ற நோயின் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் பொன்னையா அற்புதச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நெற் பயிரில் நெமடோட் தாக்கம்
நாடளாவிய ரீதியில் நெற்செய்கையில் மஞ்சள் நிறமாதல் மற்றும் வளர்ச்சி குன்றுதல் அவதானிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தின் உளுக்குளம், மடுகந்த மற்றும் அவுசதப்பிடடிய போன்ற விவசாய போதனாசிரியர் பிரிவுகளில் நெற் பயிரில் நெமடோட் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு நெமடோட் தாக்கம் பனிப்பூச்சியின் தாக்கம், முறையற்ற பசளை பயன்பாடு கபிலநிறப்புள்ளி நோய் போன்ற காரணங்களாக காணப்படுகின்றது.
அறிகுறிகள்
நெமடோட் தாக்கம் காரணமாக நெற் பயிர் தண்டு மஞ்சள் கபில நிறமாதல், நெற் பயிரின் வளர்ச்சி குன்றுதல் மேற்குறிப்பிட்ட இயல்புகளை காட்டும் நெற்பயிரை வேர் தொகுதிக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அகற்றி அதன் வேர் தொகுதியை கழுவி அவதானிக்கவும், பால் வேரின் நுனிப்பகுதி கொக்கி மட்டை போன்று (கொக்கி போன்று வளைந்த) வேர் தொகுதியில் முடிச்சு காணப்படும் போன்றவாறு கண்டறியலாம்.
கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை
இவற்றை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை, நீர் பாய்ச்சும் போது வயற் துண்டின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு செல்லாதவாறு நீ பாய்ச்ச வேண்டும்.
விவசாய உபகரணங்களை ஒரு வயலிலிருந்து மற்றுமொரு வயலிற்கு கொண்டு செல்லும் போது நன்கு சுத்தப்படுத்தி செல்லவும், ஒரு வயலிலிருந்து மற்றுமொரு வயலிற்கு செல்லும் போது பாதங்களை சுத்தப்படுத்தி செல்லவும், தாக்கத்தை கண்டறிந்ததன் பின்னர் இறுதி தீர்வாக நெமடோட் நாசினியான எபமெக்சினை இடவும்.
இதுதொடர்பான மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள அருகிலுள்ள கமநலசேவைத்
திணைக்களங்களை நாடவும்" என தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 53 நிமிடங்கள் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
