வவுனியா இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது
வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்களில் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (24.11.2023) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெட்ரோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் இருவர் மரணமடைந்திருந்தனர்.
குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட ஆறு பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப்பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணை
இதன்போது, மேலும் மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராக சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்பட்டமையினால் அவர்களை கைது செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
குறித்த மூவரும் தலைமறைவாக இருந்ததால் அவர்களது கடவுச்சீட்டுகள் நீதிமன்றத்தால் முடக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி வவுனியா நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப்பிரிவினர் சந்தேகநபர்களில் ஒருவர், ஹொரவப்பொத்தானை பகுதியில் மறைந்திருந்த நிலையில் அவரை கைது செய்துள்ளதுடன், அவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை, வவுனியா, 4ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 7 மணி நேரம் முன்
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri