ஈபி.ஆர்.எல்.எப் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கோவிட் தொற்றால் மரணம்
முன்னாள் கிராம அலுவலகரும், ஈபி.ஆர்.எல்.எப் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக குழு உறுப்பினருமான பஞ்சாட்சரம் உமாபதி கோவிட் தொற்றால் இன்று மரணமடைந்துள்ளார்.
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நீண்ட காலமாக கிராம அலுவலகராக கடமையாற்றி ஓய்வு பெற்ற பின்னும் சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டவருமான பஞ்சாட்சரம் உமாபதி கோவிட் தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி வவுனியா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.
இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டனி சார்பில் வன்னித் தேர்தல் தோகுதியில் போட்டியிட்டு இருந்ததுடன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் (ஈபிஆர்எல்எப்) கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக குழு உறுப்பினரும் ஆவார்.
இதேவேளை, இவரது தாயார் கடந்த 2 ஆம் திகதி கோவிட் தொற்று காரணமாக மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சன் டிவியில் கணவன், ஜீ தமிழில் மனைவி என நடிக்கும் ரியல் சீரியல் ஜோடிகள்... யாரெல்லாம் பாருங்க Cineulagam