பிரதி அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்!
வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் வட மாகாண ஆளுநர் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்றிருந்தது.
வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று இக் கூட்டம் இடம்பெற்றது.
முக்கிய விடயங்கள்
இதன்போது மாவட்டத்தில் இடம்பெற்ற பேரிடர் தொடர்பாகவும், நிவாரண நலன்புரி செயற்திட்டங்கள் தொடர்பாகவும் மற்றும் ஏனைய முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தில் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகம், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், செ.திலகநாதன், ரிசாட் பதியுதீன், து.ரவிகரன், ப.சத்தியலிங்கம் மற்றும் அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன், பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி சபை தவிசாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருத்தனர்.


தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri