வவுனியா மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சில முக்கிய தீர்மானங்கள் (Video)

Sri Lanka Police Vavuniya Sri Lankan Peoples
By Thileepan Jun 13, 2023 01:46 PM GMT
Report

வவுனியா-நெளுக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அதிகளவாக மாடுகள் கடத்திச் செல்லப்படுகின்ற சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இன்று(13.06.2023) கலந்துரையாடும் போதே குறித்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


வவுனியா மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சில முக்கிய தீர்மானங்கள் (Video) | Vavuniya District Coordination Committee Meeting

இது தொடர்பில் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா-நெளுக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அதிகளவாக மாடுகள் கடத்திச் செல்லப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கின்றன. அத்துடன் நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.

எனவே அவரை இடமாற்றி ஒழுக்காற்று நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு தெரிவித்திருந்தார்.

வவுனியா மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சில முக்கிய தீர்மானங்கள் (Video) | Vavuniya District Coordination Committee Meeting

பொலிஸார் மீது குற்றச்சாட்டு

அதற்கு பதில் அளித்த மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர், மாடுகள் களவாடப்பட்டுள்ளமை தொடர்பாக நேற்றையதினம் (12.06.2023) கைதுசெய்யப்பட்ட இருவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளோம்.

அத்துடன், இச்சம்பங்கள் தொடர்பாக தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

வவுனியா மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சில முக்கிய தீர்மானங்கள் (Video) | Vavuniya District Coordination Committee Meeting

நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மக்களுக்கு விரோதமாக செயற்பட்டிருந்தால், அது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பரிசீலிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

பதிவு செய்யப்படாத மருந்தகங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வவுனியாவில் பதிவு செய்யப்படாத ஐந்து மருந்தகங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் 19 தனியார் மருந்தகங்கள் உள்ளது. அவற்றில் 8 மருந்தகங்கள் பதிவு செய்யப்படவில்லை. அதில், 5 மருந்தகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம். ஏனைய மூன்று மருந்தகங்கள் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை எமக்கு வழங்கியுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சில முக்கிய தீர்மானங்கள் (Video) | Vavuniya District Coordination Committee Meeting

இதேவேளை, வவுனியா பொது வைத்தியசாலையில் உள்ள மருந்தகங்கள் உரிய நேரத்திற்கு முன்பாகவே மூடப்படுவதாக ஒருங்கிணைப்பு கூட்டத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக ஆராய்வதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டவிரோதமாக காணிகளை அடாத்தாக கையகப்படுத்தல், கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு முன்பாக சட்டவிரோதமான முறையில் இடம்பிடித்து பணம்பெறல், போதைப்பொருள் விற்பனை, வவுனியா வைத்தியசாலையில் மருந்தாளர்கள் பற்றாக்குறை மற்றும் வவுனியாவில் தனியார் மருந்தகங்களில் அங்கீகரிக்கப்பட்ட மருந்தாளர்கள் இன்மை போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்ததுடன், அது தொடர்பான சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இன்றைய அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியூதீன்,செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம்,பிரதம செயலாளர் சமன்பந்துலசேன,மாவட்ட அரச அதிபர் பி.ஏ.சரத்சந்திர, உள்ளூராட்சி சபைகளின் செயலாளர்கள், பிரதேச செயலர்கள்,திணைக்கள தலைவர்கள், பொலிஸார் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US