வவுனியாவில் மின்னல் தாக்கி குடும்பஸ்தர் மரணம்
வவுனியா இராசேந்திரகுளம் பகுதியில் மீன்பிடிக்க சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் இராசேந்திரகுளத்தில் மீன்பிடிப்பதற்காக இன்று (26.) காலை தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் வீடுதிரும்பாத நிலையில் அவரது மனைவி குளத்து பகுதிக்கு சென்று தேடியுள்ளார்.
இதன்போது குளப்பகுதியில் காணப்பட்ட பிட்டியில் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டது. மின்னல் தாக்கத்தின் காரணமாக இறந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவத்தில் சிவலிங்கம் தினேஷ்குமார் என்ற இளம் குடும்பஸ்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
சம்பவ இடத்திற்கு சென்ற கிராம சேவையாளர் பிரதீப் மற்றும் நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதுடன்,
அவ்வப்போது இடி மின்னல் தாக்கமும் ஏற்பட்டு வருகின்றது இதனால் மக்கள் அவதானமாக செயற்படவேண்டியது கட்டாயமாகும்
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam