ஊரடங்கு சட்டத்தால் முழுமையாக முடங்கியது வவுனியா: பொலிஸார் தீவிர கண்காணிப்பு (Photos)
நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக வவுனியா நகரம் முழுமையாக முடங்கியுள்ளதுடன், பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அரசாங்கத்தினால் நாடு முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணிவரை ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து வவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள், உணவகங்கள் என அனைத்து வியாபார நிலையங்களும் பூட்டப்பட்டுள்ளதுடன், வீதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
பொலிஸார், இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன்,
வீதியால் செல்லும் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களை வழிமறித்து பொலிஸார்
விசாரணைகளை மேற்கொள்வதுடன், அனுமதியின்றியும், அத்தியாவசிய தேவையின்றியும்
பயணிப்பவர்களை எச்சரித்து பொலிஸார் மீள அனுப்பி வருகின்றனர்.



லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan