வவுனியாவில் காதலியை மிரட்டி பணம் பெற்ற இளைஞர் மீது பொலிஸ் முறைப்பாடு
வவுனியாவில் யுவதி ஒருவரை காதலித்த போது பகிர்ந்து கொண்ட படத்தை காட்டி பணம்
பறித்ததாக இளைஞர் ஒருவருக்கு எதிராக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியை சேர்ந்த இளம் யுவதி ஒருவரை காதலிப்பதாக ஏமாற்றி அவரது அந்தரங்க படங்களை வைத்து பணம் பறித்ததாக வவுனியா நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகனுக்கு எதிராக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெண் குடும்பத்தாருக்கு மிரட்டல்

வவுனியா நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உக்கிளாங்குளம் பகுதியை சேர்ந்த இளம் யுவதியை மணம் முடிப்பதாக கூறி ஆசை வார்த்தைகளை காட்டியதுடன், இருவரும் பகிர்ந்து கொண்ட படங்களை வைத்து யுவதியை அச்சுறுத்தி பணம் பெற்றதாகவும், தொடர்ந்து குறித்த காணொளிகளை தனது நண்பர்களுடனும் பகிர்ந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட யுவதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்த பின் காதலனின் தரப்பில் பாதிக்கப்பட்ட யுவதியின் குடும்பத்தினருக்கு முறைப்பாட்டை மீள பெறுமாறு அச்சுறுத்தல் விடப்பட்டுவருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தரப்பினூடாக அறியமுடிகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் அய்யனார் துணை வரை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் துரந்தர் திரைப்படம்.. என்று, எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது தெரியுமா? Cineulagam