வவுனியா பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி (Photos)
தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு வவுனியா பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
குறித்த அஞ்சலி நிகழ்வானது இன்று (20.09.2023) 6ஆவது நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
மலர்தூவி அஞ்சலி
தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகப் பகுதிகளிலும், புலம்பெயர் தேசங்களிலும் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் திலீபனின் உண்ணாவிரதத்தினை நினைவுகூர்ந்து வவுனியா பல்கலைக்கழகத்தில் அவருடைய திருவுருவப்படம் பொறித்த பதாகை காட்சிப்படுத்தப்பட்டு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டமை குறி்ப்பிடத்தக்கது.
யாழ். பல்கலைக்கழகத்திலும் நினைவேந்தல் நிகழ்வு
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் 6ம் நாள் நினைவேந்தல் இன்று பல்கலைக்கழக பிரதான வளாக பொதுத் தூபியில் மாணவர்களால் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஆளணியினர், ஊடகவியலாளர் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்கள் - தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
