வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்
வவுனியா (Vavuniya) மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி அழகியவண்ண உள்ளிட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் தற்போது நாடு பூராகவும் பல பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
கல்கிசை பொலிஸ் நிலையத்திற்கும் இடமாற்றம்
அதற்கமைவாக வவுனியா மாவட்டத்தில் கடந்த காலத்தில் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய நிர்வாக பிரிவு பொறுப்பதிகாரி, வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி, புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பல பதவி நிலைகளை வகித்து, தற்போது வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயற்படும் வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரியாகவும் செயற்பட்ட அழகியவண்ணவிற்கு நேற்று (13) முதல் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், தமன பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரியாக அவர் இடமாற்றப்பட்டுள்ளார்.
அத்துடன், நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.எம்.பி.ஆர்.கே.திவுல்வெவ அனுராதபுரம் பொலிஸ் நிலையத்திற்கும், உளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கல்கிசை பொலிஸ் நிலையத்திற்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 12 மணி நேரம் முன்

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam
