பளு தூக்கல் போட்டியில் வவுனியா மாவட்ட வீர வீராங்கனைகள் சாதனை
வடக்கு மாகாண ரீதியிலான 2024ஆம் ஆண்டுக்கான பளுத் தூக்கல் போட்டியில் பங்குபற்றி, வவுனியா (Vavuniya) மாவட்ட வீர வீராங்கனைகள் சாதனை படைத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் (Jaffna) துரையப்பா விளையாட்டரங்கில் நேற்றைய தினம் (12.05.2024) இடம்பெற்ற பளுத் தூக்கும் போட்டியில் வவுனியா மாவட்டம் இரண்டாவது இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளது.
குறித்த போட்டியில் P.மேரி அசமிதா 49kg எடைப்பிரிவில் 90kg தூக்கி 1ஆம் இடத்தினையும், S.நிதர்சினி 59kg எடைப்பிரிவில் 85kg தூக்கி 1ஆம் இடத்தினையும், அம்பிகா 64kg எடைப்பிரிவில் 85kg தூக்கி 2 ஆம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.
தொடரும் சாதனை
அதேவேளை, N.சுஸ்பிதாகினி 71kg எடைப்பிரிவில் 95kg தூக்கி 2ஆம் இடத்தினையும், Pஅஜந்தா 55kg எடைப்பிரிவில் 56kg தூக்கி 3 ஆம் இடத்தினையும், அபிஸாலினி 89 kg எடைப்பிரிவில் 75 kg தூக்கி 3ஆம் இடத்தினையும், ஆண்கள் பிரிவில் கோகுலன் தனுசிகன் ஆகியோர் 3ஆம் இடத்தினையும் பெற்றுள்ளார்கள்.
வவுனியா மாவட்ட விளையாட்டுத் துறை அதிகாரி அமலனின் ஒழுங்குபடுத்தலில் வடக்கு மாகாண
ரீதியில் வெற்றிபெற்று, வவுனியா பளுத் தூக்கல் கழகத்தின் பயிற்றுவிப்பாளர்
ஞா.ஜீவனுக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.
இவ்வாறு தற்காலத்தில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த வீர, வீராங்கனைகள் அதிகம் பளுத் தூக்கும் போட்டிகளில் வெற்றி பெற்று தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |