வவுனியா மோட்டார் சைக்கிள் விபத்தில் 9 வயது சிறுவன் பலி
வவுனியா - புதுக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 9 வயதுடைய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுக்குளம் பிரதேசத்தில் இன்று(03.10.2023) மதியம் இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,
பாடசாலையிலிருந்து தந்தை தனது 7 வயது மகள் மற்றும் உறவினர் ஒருவரின் 9 வயதுடைய சிறுவனையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றபோதே விபத்து ஏற்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
இந்நிலையில், விபத்தில் படுகாயம் அடைந்த சிறுவர்களை வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 9 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவன் கனிஸ்ட வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஒன்பது வயதுடைய வி. டினோஜன் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் முன்னேடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
