வவுனியா- வைரவபுளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் படுகாயம்
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் பிக்கப் ரக வாகனமும், மோட்டர் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (12.03) காலை 10.20 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, பண்டாரிக்குளம் அம்மன் கோவில் வீதியிலிருந்து வைரவபுளியங்குளம், புகையிரத வீதி நோக்கித் திரும்ப முற்பட்ட மோட்டர் சைக்கிளை, குருமன்காடு சந்தியிலிருந்து வவுனியா நகரம் நோக்கி புகையிரத வீதியில் பயணித்த பிக்கப் ரகவாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞன் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, விபத்தை ஏற்படுத்திய பிக்கப் ரக வாகனம் காயமடைந்தவரை ஏற்றிக் கொண்டு விபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து உடனடியாகவே சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

15 நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் F-35B பிரித்தானிய போர் விமானம்: அகற்றப்பட்ட தரவுகள் News Lankasri
