வவுனியா - புளியங்குளத்தில் விபத்து : மூவர் காயம் (Photos)
வவுனியா, புளியங்குளம் ஏ9 வீதியில் மாட்டுடன் முச்சக்கரவண்டி மோதுண்டு குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
இன்று மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முச்சக்கரவண்டி வண்டி ஏ9 வீதியூடாக மாங்குளம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது புளியங்குளம் பகுதியில் வீதியின் குறுக்காக மாடு புகுந்ததில் முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து மாட்டுடன் மோதுண்டு குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் விபத்து
தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri
