வவுனியா - செட்டிகுளத்தில் தீக்கிரையாகியுள்ள புத்தக விற்பனை நிலையம்
வவுனியா - செட்டிகுளம் பிரதேசத்தில் இன்று காலை புத்தக விற்பனை நிலையமொன்று தீக்கிரையாகியுள்ளது.
செட்டிகுளம் பிரதான வீதியிலுள்ள குறித்த புத்தக விற்பனை நிலையம் இன்று காலை திறக்கப்படுவதற்கு சற்று முன்னரே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக புத்தக விற்பனை நிலையத்தின் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்திற்கு மின் ஒழுக்கே காரணம் என்று ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற பொதுமக்கள் பெரும் முயற்சியின் பின் தீயைக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த அனர்த்தத்தில் விற்பனை நிலையத்தில் இருந்த நிழல்பிரதி இயந்திரம், குளிர்சானப்பெட்டி மேலும் பல பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமடைந்துள்ளன.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற மின்சார சபையினர் மற்றும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 19 மணி நேரம் முன்
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan