உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்காக வவுனியாவில் செலுத்தப்பட்டுள்ள கட்டுபணம் தொடர்பான தகவல் (photos)
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வவுனியாவில் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் உள்ளடங்களாக 82 கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை நேற்று (20.01.2023) எமது பிராந்திய செய்தியாளரிடம் மாவட்ட தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணங்கள் தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டு இறுதி கட்டத்தை அடையும் நிலையில், வவுனியா மாவட்டத்தில் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் உள்ளடங்களாக 82 கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள்
வவுனியா மாவட்டத்தில் ஒரு வவுனியா மாநகரசபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை என 5 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன.
அதில் சில உள்ளூராட்சி மன்றங்களில் மட்டும் போட்டியிடுவதற்கு சில கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

வேட்புமனுத் தாக்கல்
அதனடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் முழுமையாக 78 கட்டுப்பணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், ஒரு கட்சி வேட்புமனுத் தாக்கலையும் இதுவரை செய்துள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வவுனியா மாநகர சபையில் போட்டியிடுவதற்கே அதிகளவிலான கட்டுப்பணங்கள்
செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறமை குறிப்பிடத்தக்கது.
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam