வவுனியாவில் இருந்து 537 பெண்கள் வீட்டு பணியாளர்களாக மத்திய கிழக்கு நாடுகளிற்கு பயணம்
வவுனியாவில் இருந்து 2023 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஊடாக 537 பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளிற்கு வீட்டு பணியாளர்களாக சென்றுள்ளதாக வவுனியா மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மாவட்ட இணைப்பாளர் சி.கிருஸ்ணகுமார் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று (28.12.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கூறியுள்ளார்.
பயிற்சியற்ற தொழிலாளர்கள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னரான காலப்பகுதியில் அதிகளவான ஆண்கள் மற்றும் பெண்கள் வீட்டு பணியாளர்கள், தொழிலாளர்களாக சவுதி, கட்டார், குவைத் உட்பட மத்திய கிழக்கு நாடுகளிற்கு மாதம் 175 பேர் வரை பயணமாகின்றனர்.
இதில் 90 வீதமானவர்கள் பயிற்சி அற்ற தொழிலாளர்களாகவே செல்கின்றனர். மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டில் தொழிலாளர்களாக இலங்கையில் இருந்து 311,263 பேர் வரை சென்றுள்ளனர்.
இவ்வாண்டு இது வரை வவுனியாவில் இருந்து 537 பெண்கள் வீட்டு பணியாளர்களாக பதிவு செய்து சென்றுள்ளனர்.
இதேவேளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் பெருமளவு எண்ணிக்கையானோர் தொழிலாளர்களாக மத்திய கிழக்கு நாடுகளிற்கு சென்றுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |