பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிரான கையெழுத்து போராட்ட ஊர்தி வவுனியாவை அடைந்தது
பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கக்கோரிய ஊர்திவழி கையழுத்து போராட்டம் இன்றையதினம் (18.09) வவுனியாவை வந்தடைந்தது.
இலங்கை தழிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மற்றும் , சர்வஜன நீதி அமைப்பு இணைந்து முன்னெடுத்து வரும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையான ஊர்திவழி கையெழுத்து போராட்டம் வவுனியாவிலும் முன்னெடுக்கப்பட்டது.

காலை 10 மணியளவில் வவுனியா தமிழரசுகட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த கையெழுத்து போராட்டம், நகரின் பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதி்ராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளையின் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டு தமது ஆதரவினை வழங்கியிருந்தனர்.


சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri