வவுனியாவில் நாளை முதல் இயங்கவுள்ள கோவிட் சிகிச்சை நிலையம்
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் 200 கட்டில்களை கொண்டதாக அமைக்கப்பட்ட சிகிச்சை நிலையம் நாளை முதல் இயங்கும் என மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை நிலையத்தின் இறுதிக்கட்ட வேலைகளை இன்று பார்வையிட்ட பின்னரே இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் கோவிட் தொற்று தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் கோவிட் சிகிச்சை மையங்களை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், வவுனியா பொருளாதார மத்திய நிலையம் கோவிட் சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. குறித்த பொருளாதார மத்திய நிலையத்தில் 200 கட்டில்கள் போடப்பட்டுள்ளதுடன், 200 கோவிட் நோயாளர்களை தங்க வைத்து சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடுகளை இராணுவத்தினர் மற்றும் சுகாதார பிரிவினர் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.
இன்றைய தினம் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு, பாக்கியம் அறக்கட்டளை, அபிராமி உபாசகி, ராம் பவுண்டேசன் என்பன இணைந்து 30 மின் விசிறிகளை குறித்த சிகிச்சை நிலையத்திற்காக வழங்கியுள்ளனர். அதனை நாம் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது பயன்படுத்த முடியும்.
இந்தநிலையில், வவுனியா பொருளாதார நிலையம் கொரோனா நோயாளர்களை உள்வாங்குவதற்கு தயாரான நிலையில், தற்போது சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளதுடன், நாளை(11.05) முதல் நோயாளர்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
குறித்த கோவிட் சிகிச்சை நிலையத்தை அரச அதிபர், இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவினர் பார்வையிட்டதுடன், அன்பளிப்பாக சிகிச்சை நிலையத்திற்கு வழங்கப்பட்ட மின் விசிறிகளையும் பெற்றுக்கொண்டனர்.










சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
