வடக்கில் தீவிரமடையும் ஆபத்தான நிலைமை: வௌியான முக்கிய அறிவிப்பு
இலங்கையில் காற்றின் தரச் சுட்டெண் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட சில இடங்களில் காற்றின் தரம் மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக நேற்று (10.12.2022) தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று காலையுடன் ஒப்பிடுகையில் இன்று (11.12.2022) காலை வேளையில் காற்றின் தரம் சாதாரண போக்கை அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
காற்று தரச் சுட்டெண் விபரம்
இருப்பினும் நாட்டில் கடுமையான சுகாதார அபாயமுள்ள பகுதியாக மன்னார் நகரப்பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்று பிற்பகல் 53 என மதிப்பிடப்பட்ட மன்னாரின் காற்று தரச் சுட்டெண் தற்போது 59 ஆக உயர்ந்துள்ளது.
கேகாலை மாவட்டத்தின் காற்று தரச் சுட்டெண் 22 ஆகவும், கொழும்பு மாவட்டத்தின் தரச் சுட்டெண் 42 ஆகவும் உள்ளது.
எவ்வாறாயினும், யாழ்ப்பாணத்தின் காற்று தரச் சுட்டெண் 44 ஆக சாதாரண நிலைமையாகவே கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 11 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
