மாவீரர் தின நாட்களில் மாத்திரம் திறம்பட செயல்படும் புலனாய்வுப் பிரிவினர்: சாணக்கியன் சீற்றம்
மாவீரர் தின நாட்களில் திறம்பட செயல்படும் புலனாய்வுப் பிரிவினர் சட்ட விரோத மதுபான பிரச்சினையில் திணறுவது ஏன் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார்.
வவுணதீவு மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களுக்கான அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இன்றைய தினம் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“சட்ட விரோத மதுபான பிரச்சினை மட்டக்களப்பில் பரவலாக பல இடங்களில் காணப்படுகின்றது. இருப்பினும் புலனாய்வுப் பிரிவினர் வருடத்துக்கு ஒரு முறை மக்களுக்காக உயிர் நீர்த்த தத்தம் உறவுகளை நினைவு கூறி அஞ்சலி செய்யும் நாட்களில் நடக்கும் சம்பவங்களை மாத்திரம் புலனாய்வு செய்து கைதுகளை மேற்கொள்கின்றனர்.
அதில் கேக் கொடுத்தவர் வெட்டியவர் போன்றோரை கூட கைது செய்தார்கள்.
ஆனால் வருடம் முழுவதும் ஒவ்வெரு நாளும் நடக்கும் சட்ட விரோத மதுபான பிரச்சினைக்கு மாத்திரம் முற்றுப் புள்ளி வைக்க முடியவில்லை. அதற்கான காரணம் என்ன” என கேளவியெழுப்பியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
