இறுதிப் போரின் சாட்சியாக உறங்கிக் கொண்டிருக்கும் வட்டுவாகல் பாலமும் மக்களின் எதிர்பார்ப்பும்...!
இலங்கைத் தீவில் இடம்பெற்ற 30 வருட உள்நாட்டு யுத்தமானது 2009 மே 18 மௌனிக்கப்பட்டது.
அந்தக் காலகட்டத்தில் உலகம் முழுவதும் பேசு பொருளாக இருந்த இடங்களில் முள்ளிவாய்க்கால் மற்றும் வட்டுவாகல் பாலம் என்பன முக்கியமானவை.
போரின் இறுதித் தருணங்களில் நடந்த அத்தனைக்கும் சாட்சியங்களாக விளங்கும் இடங்களே அவை.
இறுதிக் கட்டப் போரின் போது பல லட்சம் தமிழர்களின் உயிரை காத்த பாலமே வட்டுவாகல் பாலம் ஆகும். இப்பாலம் முன்னோர்களின் கருத்துக்களின் படி 1950 ஆம் ஆண்டு காலப் பகுதியில் கட்டப்பட்டதாக கருதப்படுகின்றது.
இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்ததாக
முல்லைத்தீவு நகரத்தின் நுழைவாயிலாக வட்டுவாகல் பாலம் அனைவரையும் வரவேற்கின்றது.
சுமார் 440 மீற்றர் தூரம் கொண்ட வட்டுவாகல் பாலம் வரலாற்றுத் தொன்மையான முல்லைத்தீவு மாவட்டத்தின் ஓர் சின்னமாகும்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏ35 இலக்க வீதியில் இப்பாலம் அமைந்துள்ளது.
நந்திக்கடல் களப்பை ஊடறுத்து, முல்லைத்தீவு நகரையும், புதுக்குடியிருப்பு பகுதியையும் இணைக்கும் வகையில் இந்த பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
போரின் இறுதித் தருணத்தின் போது, இலங்கை இராணுவம் இந்த பாலத்திற்கு மறுபுறத்தில் முல்லைத்தீவு பக்கத்திலும், விடுதலைப் புலிகள் பாலத்திற்கு அடுத்த திசையில் புதுகுடியிருப்பு பக்கத்திலும் இருந்தவாறே இறுதி போரை எதிர்கொண்டிருந்தனர்.
புதுக்குடியிருப்பு திசையில் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்ததாக கூறப்படும் முள்ளிவாய்க்கால் பகுதி அமைந்துள்ளது.
வட்டுவாகல் பாலத்தை கடந்து சென்றவர்களில்
புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால் போன்ற பகுதிகளில் இறுதித் தருணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்த பொதுமக்கள் இந்த வட்டுவாகல் பாலத்தை தாண்டி பலத்த சுமையுடனும், கண்ணீருடனும் முல்லைத்தீவு பகுதியில் நிலை கொண்டிருந்த இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்றிருந்தனர்.
வட்டுவாகல் பாலத்தை கடந்து சென்றவர்களில் இராணுவத்தினரினதும், அரசாங்கத்தினதும் அறிவித்தலுக்கு அமைய விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையோர் மற்றும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என பலர் இராணுவத்தினரிடம் அவர்களின் உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டனர்.
அவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்களில் பலர் இன்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களாக உள்ளனர்.
அந்தவகையில், காணாமல் ஆக்கப்பட்ட சிலரின் கடைசிப் பயணம் வட்டுவாகல் பாலமாகவே உள்ளது. ஆகவே, வட்டுவாகல் பாலம் என்பது போரின் சாட்சியாகவும், அடையாளமாகவும் விளங்குகின்றது.
சுனாமி அனர்த்தத்தின் போதும் சேதமடைந்திருந்த குறித்த பாலம் இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தாக்குதல்களின் போதும் மேலும் சேதமடைந்தது.
அந்த வடுக்களை இன்றும் பாலத்திற்கு அருகில் காண முடிகின்றது. பாலத்தின் இரு புறத்திலும் நந்திக்கடல் களப்பு அமைந்துள்ளதுடன், பாதுகாப்பு வேலிகள் இன்றியே பாலம் இன்றும் காணப்படுகின்றது.
பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள சிறு எல்லை கற்களும் உடைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
பாலத்திற்கு இடையில் பல இடங்களில் வெடிப்புக்களை அவதானிக்க முடிவதுடன், பல இடங்களில் பாலம் பெரியளவில் உடைந்துள்ளதையும் காண முடிகின்றது.
போரின் இறுதிக் கணங்களை
முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலம் உடைந்து விழும் அபாயத்தில் இருக்கின்றது. இந்த பாலத்தை புனரமைத்து தருமாறு பல்வேறு தரப்பினரும் கடந்த சில வருடங்களாக கோரிக்கை விடுத்த போதிலும் கடந்த கால ஆட்சியாளர்கள் அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.
ஆனால், தற்போதைய அநுரகுமார திஸாநாயக்கா தலைமையிலான அரசாங்கம் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் வடக்கிற்கு முன்னுரிமையளித்து நிதிகளை ஒதுக்கியிருந்தது.
அதன் அடிப்படையில் வட்டுவாகல் பாலம் புனரமைப்புக்கு 1.4 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆரம்ப வேலைகளின் ஆரம்ப நிகழ்வு கடந்த 2 ஆம் திகதி ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
இப் பால கட்டுமான அபிவிருத்தி திட்டம் 2027 செப்டம்பர் 02 ஆம் திகதி நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. நீண்டகாலமாக அப் பகுதி மக்கள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த அரசாங்கம் வட்டுவாகல் பாலத்தை புனரமைக்க நிதி ஒதுக்கியுள்ளது.
அது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் போரின் வடுக்களை சுமந்த மக்கள் அந்த போரின் அடையாளமாகவே வட்டுவாகல் பாலத்தைப் பார்த்து வருகின்றனர்.
போரின் இறுதிக் கணங்களை வட்டுவாகல் பாலம் மீள நினைவுபடுத்தும் சின்னமாகவும் மக்கள் பார்க்கின்றனர்.
கண்முன்னே இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட பலரின் ஆறுதல் இடமாக வட்டுவாகல் பாலம் பழைய நினைவை மீட்டுக் கொடுக்கின்றது.
இதனால் 75 வருடகால வரலாற்றைக் கொண்ட குறித்த பாலத்தை உடைக்காது புதிய பாலம் ஒன்றை அமைக்க வேண்டும் எனற கருத்து பாதிக்கப்பட்ட மக்களால் முன்வைக்கபபட்டு வருகின்றது.

நாடுகளில் ஆட்சி மாற்றம் செய்யக் கூடிய சந்தர்ப்பத்தை உருவாக்கும் அமெரிக்க நிறுவனங்கள் - ரணில் எச்சரிக்கை
போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
முள்ளிவாய்கால் போரின் வெற்றியை அப் பகுதியில் இராணுவத்தினர் இராணுவத்தின் சிலை ஒன்றை நிறுவி ஞாபகப்படுத்தி வருகின்றனர்.
ஆனையிறவிலும் வெற்றிக்கான அடையாளத்தை இராணுவம் நிறுவியுள்ளது.
அப்படி இருக்கையில் தமது இழப்புக்களினதும், துயரங்களினதும், வலிகளினதும் அடையாளமாகவும் போரின் சாட்சியாகவும் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் வட்டுவாகல் பாலத்தை பாதிக்கப்பட்ட மக்கள் பார்ப்பதில் தவறில்லை.
அந்த வகையில் அந்தப் பாலத்தை அவ்வாறே பாதுகாத்து புதியதொரு பாலத்தை நிர்மாணித்து அதனை போக்குவரத்துக்கு பயன்படுத்துவதன் மூலம் இந்தப் பாலத்தை ஒரு அடையாளமாக பாதுகாக்க முடியும்.
அது போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு ஆறுதலாகவும் அமையும். எனவே, இது தொடர்பில் அரசாங்கமும் உரிய அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட மக்களுடன் பேசி ஒரு முடிவை எடுக்க வேண்டும்.
அவ்வாறு எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் வட்டுவாகல் பால கட்டுமாணம் அமைவதன் மூலமே மக்கள் விரும்பும் ஒரு அபிவிருத்தி கட்டுமாணமாக அது அமையும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
