வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட கிரிக்கெட் தொடர்
யாழ். வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் முதல் தடவையாக பி
பி.எல் என்ற பெயரிலான கிரிக்கெட் தொடர் பழைய மாணவர் சங்கத்தினால் ஆரம்பித்து
வைக்கப்பட்டுள்ளது.
குறித்த போட்டியானது, நேற்று முன்தினம் (23) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, போட்டிகள் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றுள்ளதுடன் போட்டியில் பாடசாலை சார்பாகவும் ஒரு அணியும் பழைய மாணவர்களின் 20 அணிகளும் பங்குபற்றியுள்ளன.
பங்குபற்றிய அணிகள்
அதேவேளை, 24ஆம் திகதியான 2010 மற்றும் 2014ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி நடைபெற்றுள்ளது.
இந்த போட்டியில் 2014ஆம் ஆண்டிற்கான அணி வெற்றி பெற்றுள்ளதுடன் போட்டியில் ரி.சரவணன் எனப்படும் வீரர் சிறந்த துடுப்பாட்ட வீரனாகவும், 2010 அணியை சேர்ந்த எஸ்.டுசியந்தன் சிறந்த பந்து வீச்சாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும், இதன்போது உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தின் தலைவர், கல்லூரியின் அதிபர் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |