பாக்குத்தெண்டலுடன் ஆரம்பமான வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவம்
வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வான பாக்குத்தெண்டல் உற்சவம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த உற்சவமானது இன்று (06.05.2024) அதிகாலை நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வு ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழாவில் ஆலயத்துடன் தொடர்புடைய வீடுகளுக்கு சென்று தெரிவிக்கும் சம்பிரதாய உற்சவமாக இது அமைந்துள்ளது.
உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதம்
இந்நிலையில் பாக்குத்தொண்டலுக்கு சென்றவர்கள் முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்தினை வந்தடைந்ததும் அங்கு அம்மன் சந்நிதானத்தில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்தவகையில் எதிர்வரும் 13ஆம் திகதி கடல்நீர் தீர்த்தம் எடுத்தல் நிகழ்வும் அதனை தொடர்ந்து ஏழு நாட்கள் முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயத்தில் அம்மன் சந்நிதானத்தில் உப்பு நீரில் விளக்கெரியும் அற்புத நிகழ்வு இடம்பெறவுள்ளது.
காட்டாவிநாயகர் ஆலய பொங்கல் உற்சவம் எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளதோடு 20ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan
