ஈஸ்டர் தாக்குதல் குறித்து வத்திக்கான் உன்னிப்பாக அவதானிக்கின்றது
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் வத்திக்கான் உன்னிப்பாக அவதானித்து வருவதாக அருட்தந்தை காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபர் தப்புல லிவேராவினால் கண்டறியப்பட்ட விடயங்கள் நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு நியாயமும் கிடைக்கப் பெறவில்லை எனவும், இதனால் சர்வதேச உதவியை பெற்றுக்கொள்ள நேரிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான உண்மையான விடயங்கள் அம்பலமாவதாக இன்னமும் தென்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவினால் செய்யப்பட்ட பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
