சிக்கலான கட்டத்தை எட்டியுள்ள கஜ்ஜா கொலை விசாரணை!
அருண விதானகமகே எனப்படும் மித்தெனிய கஜ்ஜாவின் கொலை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை உள்ளிட்ட புலனாய்வுக் குழுக்கள் புதிய பாதையில் விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.
மேலும் இந்தக் குற்றம் வெறும் பாதாள உலக மோதலின் விளைவாக இல்லாமல் ஒரு சிக்கலான சதித்திட்டத்தின் விளைவாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கஜ்ஜாவிற்கும் பெக்கோ சமனுக்கும் இடையிலான மோதலுக்குக் காரணம் 40 கிலோகிராம் ஹெராயின் எம்பிலிப்பிட்டி பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டதும், அதில் இருந்து கஜ்ஜா இரண்டு கிலோகிராம் திருடியதாகவும் கூறப்படுகிறது.
புலனாய்வு விசாரணை
எனினும் குறித்த கொலைக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை என்பது புலனாய்வு விசாரணைகளுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் விளக்கியுள்ளன.
ஒரு சாதாரண ஒப்பந்தக் கொலையைப் போலல்லாமல், எந்தவொரு பணமும் நிர்ணயிக்கப்படாமல் இதுபோன்ற குற்றத்தைச் செய்ததன் பின்னணியில் சக்திவாய்ந்த தரப்பினரின் அச்சுறுத்தல் அல்லது செல்வாக்கு இருப்பதாக விசாரணைக்குழு சந்தேம் எழுப்பியுள்ளது.
இதன்படி கொலை நடந்த நேரத்தில் கஜ்ஜா தனது இரண்டு குழந்தைகளை சுமந்து சென்றதாகவும், பெக்கோ சமனால் சுட உத்தரவிடப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இரண்டு குழந்தைகளும் கொல்லப்பட்ட பிறகு, பெக்கோ சமனின் மனைவி அவரை வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் தெரியவந்துள்ளது.
இதன்படி கஜ்ஜா கொலை(18.02.2025) செய்யப்படுவதற்கு ஒரு வருடம் ஏழு நாட்களுக்கு முன்பு, அதாவது பெப்ரவரி 11, 2024 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அரசியல் பிரமுகரான கபில திசாநாயக்கவும் ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் அதிகாரியும் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இந்நிலையில் பெக்கோ சமன் பற்றி எதுவும் குறிப்பிடாமல் அரசியல் தரப்பை குறிவைத்து அவர் கூறியதால், அந்த வெளிப்பாடுகளைத் தடுக்கும் நோக்கில் இந்தக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என புலனாய்வாளர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
கஜ்ஜாவின் குடும்ப உறுப்பினர்கள்
இந்நிலையில் கொலைக்குப் பிறகு கஜ்ஜாவின் குடும்ப உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு அளித்த முரண்பாடான அறிக்கைகளும் விசாரணைகளில் ஒரு சிக்கலான சூழ்நிலையை உருவாக்கியுள்ளன.
அவர்கள் சில தகவல்களை மறைப்பதாக விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
குறிப்பாக, கஜ்ஜாவுக்கும் கஜ்ஜாவின் மனைவிக்கும் இடையிலான குடும்பத் தகராறுகள் தொடர்பில் முன்னதாக விளக்கப்பட்டிருந்தது.
கஜ்ஜா மற்றும் அரவது மனைவிக்கு இடையிலான பிரச்சினைகள் ஆகியவை கொலைக்கான நோக்கங்களை விசாரிக்கும் போது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
இந்தக் குற்றம் தொடர்பாக, பெக்கோ சமனின் மைத்துனர் ஒரு மைக்ரோ வகை துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவர் பெக்கோசமனின் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணமோசடி வலையமைப்பின் தலைவராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், கொலையில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை கொண்டு செல்வதில் சம்பத் மனம்பேரி ஈடுபட்டதற்கான காரணங்களும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
அரசியல் தொடர்பு
இந்நிலையில் இதற்காக அவரது பொலிஸ் அடையாள அட்டை அல்லது அரசியல் தொடர்புகள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தென் மாகாணத்தில், குறிப்பாக மித்தெனிய மற்றும் வலஸ்முல்ல போன்ற பகுதிகளில் செயல்படும் இந்த குற்றவியல் வலையமைப்பிற்கு சில பொலிஸ் அதிகாரிகள் நேரடி ஆதரவைப் பெற்றுள்ளதாகவும் தற்போதைய அரசாங்கம் குற்றம் சுமத்தி வருகிறது.
இதன்படி எதிர்காலத்தில் லஞ்சம் வாங்கியது மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நடைபெற்று வரும் விசாரணைகளின் பின்னணியில், வசிம் தாஜுதீன் கொலை போன்ற சம்பவங்கள் தொடர்பாக சக்திவாய்ந்த சாட்சியாக இருந்திருக்கக்கூடிய கஜ்ஜாவை மௌனமாக்குவதே இந்தக் கொலையின் முக்கிய நோக்கமாக இருக்கலாம் என்பது புலனாய்வாளர்களின் முக்கிய சந்தேகமாக மாறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

430 கோடிகள் மதிப்புள்ள லண்டன் மாளிகை: முன்னாள் மனைவிடம் ஒப்படைக்க அமெரிக்கருக்கு உத்தரவு News Lankasri

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
