கஜ்ஜாவை நானே கொன்றேன்! விசாரணைகளில் உண்மைகளை வெளிப்படுத்திய பெக்கோ சமன்
தனது போதைப்பொருள் வலையமைப்பு பற்றிய தகவல்களை வெளிப்படுத்தியதற்காக அனுர விதானகமகே எனப்படும் கஜ்ஜாவைக் கொன்றதாக சந்தேக நபரான பெக்கோ சமன், பொலிஸ் விசாரணையின் போது ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொலைக்கு பொறுப்பேற்க ஆரம்பத்தில் ஒரு குழு தயாராக இருந்தபோதிலும், இரண்டு குழந்தைகளும் கொலையில் பாதிக்கப்பட்டதால் யாரும் பொறுப்பை ஏற்கவில்லை என்று பெக்கோ சமன் கூறியதாகக் கூறப்படுகிறது.
மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு நடத்திய விசாரணைகளின் போது பெக்கோ சமன் இந்த உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
கஜ்ஜாவின் மரணம்
கஜ்ஜாவின் மரணத்திற்குப் பிறகு தனக்கு எதிராக சுமத்தப்படக்கூடிய குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க தனது மனைவியின் வங்கிக் கணக்கில் மூன்றரை லட்சம் ரூபாயை வைப்பு செய்ததாகவும் பெக்கோ சமன் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த வைப்புத்தொகை மூலம் கஜ்ஜாவின் குடும்ப உறுப்பினர்களுடன் நட்புறவை ஏற்படுத்த முயற்சித்ததாக சந்தேக நபர் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
இருப்பினும், கஜ்ஜாவின் இரண்டு குழந்தைகளைக் கொல்லும் எண்ணம் தனக்கு இல்லை என்று பெக்கோ சமன் தெரிவித்துள்ளார்.



