யாழ்.வத்திராயனில் தாக்குதலுக்கு உள்ளாகிய ஒருவர் உயிரிழப்பு
பலத்த காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியை சேர்ந்த நபர் இன்று (23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் கடந்த (19.02.2025) அன்று மாலை நால்வர் மீது வவுனியாவில் இருந்து வந்தவர்களால் மோசமான தாக்குதல் நடாத்தப்பட்டது.
அவசர சிகிச்சை பிரிவு
குடும்ப தகராறின் காரணமாக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர் தனது தந்தை மீதும், சகோதரன் மீதும், சகோதரனின் மகன் மீதும்,சகோதரனின் மனைவி மீதும் வவுனியா பகுதியில் இருந்து வந்த வாகனத்தில் ஆட்களை அழைத்து வந்து வீட்டிற்குள் புகுந்து கம்பி,கற்களால் தாக்குதல் நடாத்தியிருந்தார்.
அடி காயங்களுக்குள்ளான நால்வரும் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியை சேர்ந்த நபர் இன்று (23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
