மக்களுக்கு பேரிடியாக மாறியுள்ள வற் வரி! மற்றுமொரு விலை அதிகரிப்பு
18 வீதத்தால் புதிய பெறுமதி சேர் வரியை நடைமுறைபடுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த வரியானது, கட்டண உயர்வு விடயத்தில் தனியார் பேருந்து தொழிற்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், கடந்த 25 வருடங்களில் தரமான தனியார் பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கு வரி விதிக்கப்படவில்லை.ஆனால் சொகுசு பேருந்துகளை இறக்குமதி செய்யும் போது குறிப்பிட்ட வரி விதிக்கப்பட்டது.
டொலரின் பெறுமதி
டொலர் பெறுமதி உயர்வால், 5.5 மில்லியன் முதல் 7 மில்லியன் ரூபாய் வரை இருந்த நிலையான பேருந்தின் விலை, தற்போது 13.7 மில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.
தனியார் துறையிடம் முன்னர் 20,000 பேருந்துகள் இருந்தன, இப்போது அவை 17,000 ஆக குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி சுமார் பேருந்துகளுக்கு பற்றாக்குறை உள்ளது.
வரி காரணமாக, பேருந்து ஒன்றின் விலை 15.7 மில்லியனாக அதிகரிக்கும். இந்த விலை உயர்வால், பேருந்து உரிமையாளர்களுக்கு பேருந்துகளை இறக்குமதி செய்யும் திறன் இல்லாமல் போகும்.
வற் வரிக்கு இணையாக, உதிரி பாகங்கள், உராய்வு எண்ணெய் மற்றும் சேவைகளின் விலையும் உயரும் எனவே கட்டணங்களையும் அதிகரிக்கவேண்டியேற்படும்.
பேருந்து கட்டணம்
இந்த புதிய வற் வரியில் எரிபொருள் விலையும் சேர்க்கப்பட்டுள்ளதால், எரிபொருள் விலையும் அதிகரிக்கும்.
இந்த அனைத்து உண்மைகளையும் கருத்தில் கொண்டால், பேருந்து கட்டணத்தில் உறுதியான அதிகரிப்பு இருக்கும்,இது சாதாரண போக்குவரத்தை பயன்படுத்தும் மக்களை நேரடியாக பாதிக்கும்.
எனினும் இந்த அனைத்து அதிகரிப்புகளுடனும், இந்த சேவையை தொடர முடியாது, இதன் காரணமாக எதிர்வரும் ஜனவரி முதல் தனியார் பேருந்து சேவையில் புதிய வற் வரிமுறை திட்டவட்டமான வீழ்ச்சியை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.