விருப்பம் இன்றியே வற் வரி அதிகரிப்புக்கு ஆதரவளித்தேன்: மொட்டு எம்.பி பகிரங்கம்
பெறுமதி சேர் வரி அதிகரிப்பு குறித்த யோசனைக்கு விருப்பம் இன்றியே தாம் ஆதரவளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போது எவரும் விரும்பி வாக்களிக்க வில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பெறுமதி சேர் வரி அதிகரிப்பினை விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பெறுமதி சேர் வரியானது
வேறு வழிகள் இன்றியே பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட்டது என எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கடந்த 11ஆம் திகதி 45 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.
இதற்கமைய தற்போது 15 சதவீதமாக அறவிடப்படும் பெறுமதி சேர் வரியானது எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 18 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.
ஜனவரி முதல் நடைமுறைக்கு
2024 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் பெறுமதி சேர் வரி உட்பட்ட பொருட்களின் பட்டியலை இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று (11) சமர்ப்பித்தார்.
சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவையும் பெறுமதி சேர் வரி அதிகரிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இரசாயன உரங்களும் பெறுமதி சேர் வரி அதிகரிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |