அலரிமாளிகையில் பெறுமதி சேர் வரி அதிகரிப்பை கொண்டாடிய பிரதமர்: சஜித் குற்றச்சாட்டு
வட் வரி என்ற பெறுமதி சேர் வரியை 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தியதை கொண்டாடும் வகையில் அரசாங்கம் அலரிமாளிகையில் விருந்து நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குறித்த விருந்து நேற்றிரவு நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (12.12.2023) குற்றம் சுமத்தியுள்ளார்.
வட் அதிகரிப்பு
மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் பேரழிவிற்குள்ளாக்கும் வட் அதிகரிப்பைக் கொண்டாடும் வகையில் பிரதமர் நடத்திய விருந்தில் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வட் அதிகரிப்புக்கான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று கூறிய பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் வட் அதிகரிப்பைக்
கொண்டாடுவதற்காக விருந்தில் கலந்து கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர்
கூறியுள்ளார்.
அந்தவகையில் பொதுஜன பெரமுனவின் இந்த இரட்டை வேடம் குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.