வற் வரி அதிகரிப்பு : நெருக்கடி நிலை தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவிப்பு
தற்போது சந்தை வட்டி விகிதங்களை ஏதாவது ஒரு வழியில் சரிசெய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் வட்டி விகிதம் நிலையானதாக உள்ளது. அதுவரை கொள்கை வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருப்போம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அதிகரிக்கும் பணவீக்கம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வங்கிக் கடன் வட்டி வீதம் மேலும் குறைய வேண்டும். வங்கிக்கடன் பெற்றவர்களின் வட்டி விகிதமும் குறைய வேண்டும். ஒவ்வொரு கடனுக்கும் தனித்தனியாக வட்டி விகிதங்களை அறிந்து கொள்வது வங்கியின் முடிவு, எனவே மத்திய வங்கி தலையிடாது.
வற் வரி அதிகரிப்பின் காரணமாக ஜனவரி மாத பணவீக்கம் சுமார் 7% ஆக உயரலாம். கடந்த மாதம் 4% ஆக இருந்த பணவீக்கம் வற் வரி மற்றும் வானிலை காரணமாக இவ்வாறு அதிகரிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில், பணவீக்க இலக்கு 5% ஆகும். சராசரி மதிப்பை 4% – 6% வரை பராமரிக்க எதிர்பார்க்கிறோம்.
எனவே, இந்த நேரத்தில், சந்தை வட்டி விகிதங்களை ஏதாவது ஒரு வழியில் சரிசெய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எங்கள் வட்டி விகிதம் நிலையானதாக உள்ளது. அதுவரை கொள்கை வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருப்போம். என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |