இலங்கை மக்களை நசுக்கும் வற் வரி : ஆடம்பர கேளிக்கை விடுதிகளில் கொண்டாட்டங்களில் ஈடுபடும் அரசியல்வாதிகள்
வற் வரி அதிரிக்கப்பட்டதன் சந்தோசத்தினை ஆளும் கட்சி அரசியல்வாதிகள் விருந்து வைத்து கொண்டாடி வருகின்றனர் என்று எதிரக்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற பாடசாலை நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அதிகரித்துள்ள வற் வரி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாடு எவ்வாரு வங்குரோத்தானது என்பதையும் அதைச் செய்தவர்களையும் உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளிப்படுத்தினாலும் வங்குரோத்தான நாட்டின் ஆட்சியாளர்கள் கூட இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.
வற் வரியை 18 சதவீதமாக அதிகரித்ததால், முட்டை மற்றும் வெங்காயத்தின் விலைகளும் அதிகரித்துள்ளன. இவ்வாறு வரியை அதிகரித்து இதனை ஓர் குதூகலமாக கருதி, மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இரவு நேரங்களில் மாளிகைகளில் விருந்துகளை நடாத்தி ஆரவாரத்துடன் மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்த விருந்துபசாரங்களுக்குக் கூட நாட்டின் வரி செலுத்துபவர்களின் பணமே செலவிடப்பட்டுள்ளது. இதுவோர் அவல நிலை. நாட்டில் இவ்வாறானதொரு அவல நிலை ஏற்பட்டுள்ள இவ்வேளையில் அவர்கள் நத்தார் பண்டிக்கைக்கும் பத்தாண்டுக்கும் மக்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.
அரசாங்கம் எவ்வளவு பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டாலும் பிரபஞ்சம், மூச்சுத் திட்டங்களின் மூலம் கல்வி, சுகாதாரத் துறையைக் கட்டியெழுப்ப எதிர்க்கட்சி தனது பணிகளை என்றும் நிறைவேற்றும். உன்னத அரச சேவைக்கான பொது யுகம் உருவாக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |