ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த சட்டத்தரணி கிரிஷ்மால் வர்ணசூரிய
கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியல் வேட்பாளரும், 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி கிரிஷ்மால் வர்ணசூரிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB) இணைந்து கொண்டார்.
சட்டத்தரணி கிரிஷ்மால் வர்ணசூரிய இலங்கை, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் 24 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவராவார்.
சட்டத்துறையில் பரந்துபட்ட அறிவு
நாட்டின் 10 சிறந்த இளம் ஆளுமைகளில் ஒருவராகவும் அவர் பெயரிடப்பட்டிருந்தார்.
இந்நாட்டில் திறமையான சட்டத்தரணிகளில் ஒருவராக திகழ்ந்து வரும் அவர், சட்டத்துறையில் பரந்துபட்ட அறிவைக் கொண்டுள்ளதன் காரணமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நன்மதிப்பை பெற்ற ஒருவராகவும் திகழ்ந்து வருகின்றார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
