யாழ்.கொடிகாமம் - வரணியில் உயிரிழந்த இளைஞனின் இறுதிச் சடங்கு
கொடிகாமம் - வரணி பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிலுசன் என்ற 23 வயதுடைய இளைஞனின் இறுதிச் சடங்குகள் நேற்றையதினம் (20)அவரது இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
அதன்பின்னர் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் மழையின் மத்தியில் எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இறுதிச் சடங்கு
யாழ். வரணி சிட்டிவேரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் கடந்த வியாழக்கிழமை (17) நீராட சென்ற வேளையிலே குறித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நீராடிய போது குறித்த இளைஞர் தாமரைக் கொடியில் சிக்குண்ட நிலையில் மீட்கப்பட்டு வரணி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞனின் மரணம் குறித்து அவரது உறவினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைத்ததுடன் அவரது மரணம் ஒரு திட்டமிட்ட கொலை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










