காசாவில் கொல்லப்பட்ட அவசர உதவியாளர்கள்..! தவறை ஒப்புக்கொண்ட இஸ்ரேல்
காசாவில் கடந்த மாதம் அவசர உதவியாளர்கள் 15 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இஸ்ரேல் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளது.
தொழில்நுட்ப தவறுகள் காரணமாகவே இந்த தவறு நடந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள்(IDF) விசாரணையில் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலில், பாலஸ்தீனிய சிவப்பு அரைச்சிலுவை அமைப்பின் அம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் ஐ.நா. ஊழியர் ஒருவர் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.
சுதந்திரமான விசாரணை
ஆரம்பகட்ட விசாரணைகளில், ஆபத்தான பகுதியில் அச்சுறுத்தலாக தென்பட்டதால் துப்பாக்கி சூடு நடத்தியதாக IDF தெரிவித்திருந்தது.
விசாரணையின் பின்னர், சம்பந்தப்பட்ட இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் துணை தளபதி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து சுதந்திரமான விசாரணையை பல சர்வதேச அமைப்புகள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
