வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வரலட்சுமி உற்சவம்
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் வரலட்சுமி உற்சவம் நேற்று(09) மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள அஸ்ட லக்ஸ்மி ஆலயத்தில் இந்த வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான அடியார்கள்
ஆயிரக்கணக்கான பக்தைகள் திருவிளக்கு பூஜைகள் செய்ய வரலட்சுமி உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது மாமாங்கேஸ்வரருக்கு விசேட அபிசேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து அஸ்ட லக்ஸ்மி ஆலயத்தில் அஸ்ட லக்ஸ்மிகளுக்கும் விசேட அபிசேகம் நடைபெற்றதுடன் விசேட பூஜைகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து பக்தைகளின் திருவிளக்கு பூஜை நடைபெற்றதுடன் அம்பாள் வீதியுலாவும் நடைபெற்றது.
இந்த வரலட்சுமி பூஜையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










