வன்னியை பாலைவனமாக்க முயற்சி: முன்வைக்கப்பட்ட பகிரங்க குற்றச்சாட்டு
வவுனியாவில் மேற்கொள்ளப்படும் கரும்பு செய்கைக்கு அதிகமான நீர் தேவைப்படுகின்றது. இதனால் வன்னி பகுதியில் நீர் இன்றி பாலைவனமாகும் நிலைமை உருவாகியுள்ளது என முன்னாள் வடமாகாண சபையின் விவசாய அமைச்சர் க.சிவனேசன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே க.சிவனேசன் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில், வவுனியாவில் கரும்பு செய்கைக்கு 70 ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்கப்படவுள்ளமை தொடர்பில் விவரமாக எடுத்துரைத்துள்ளார்.
ஒரு ஏக்கர் கரும்பு செய்கையால் வரும் வருமானத்தினை விட ஏனைய பயிர்களைச் செய்தால் 5 மடங்கு வருமானம் பெறப்படும்.
தரிசாக உள்ள பல ஏக்கர் நிலங்கள்
அத்துடன், கரும்பு செய்கைக்கு அதிகளவான நீர் தேவை என்பதை புள்ளிவிபரம் ஊடாக தெரிவித்துள்ளார். இது ஏற்கனவே வடமாகாண சபையினால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துள்ளார்.
12 தொடக்கம் 14 மாதங்கள் கரும்பு செய்கைக்கான அறுவடைக் காலம் இவ்வாறான காலத்திற்குள் ஏனைய பயிர்களைச் செய்தி அதிக லாபத்தினை ஈட்டலாம் என ஆராய்ச்சியால் நிருபிக்கப்பட்டடுள்ளது. வடமாகாணத்தில் கரும்பு செய்கை செய்து அனுபவப்பட்ட யாரும் கிடையாது.
இலங்கை அரசாங்கத்தின் கரும்பு செய்கை மேற்கொண்ட சீனி உற்பத்தி செய்யப்பட்ட கந்தளாய் சீனி தொழிற்சாலைக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் இன்று தரிசாகக் கிடக்கின்றன.
கரும்பு செய்கைக்கு மிக அதிகமான நீர் தேவைப்படுகின்றது. இதனால் வவுனியா வடக்கு பாலைவனமாகும்.
நிவர்த்தி செய்யப்படவேண்டும்
இவ்வளவு இந்த மக்களின் வாழ்வாதாரத்தினை சீரழித்து இந்த கரும்பு செய்கையினை செய்கை பண்ணவேண்டுமா என்றும் தெரிவித்த அவர்.
முதலாளித்துவ போக்குடைய ரணில் விக்ரமசிங்க தலைமையினாலான அரசாங்கம் இங்குள்ள தொழிலாளர்களின் நிதியினை பயன்படுத்தி பொருளாதாரத்தினை நிவர்த்தி செய்யப்படவேண்டும் என்ற விடையத்தில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
இதில் பாதிக்கப்படப்போவது யார் என்றால் தொழிலாளர்கள்தான்.
ஆனால் இன்று இலங்கையில் இருக்கின்ற பண முதலாளிகளாக இருப்பவர்கள் யார் என்று பார்த்தால் கடந்த காலத்தில் அரசியல் தலைமைத்துவத்தினை ஏற்றிருந்தவர்கள் தான் மிகப்பெரிய பணத்தினை கொண்டிருக்கின்றார்கள்.
அநேகமானவர்கள் வெளிநாடுகளில் மூன்றாவது மண்டல நாடுகளில் மிகப்பாரியளவில் முதலீடுகளைச் செய்துள்ளார்கள்.
இந்த முதலீடுகளை எல்லாம் மீண்டும் நாட்டிற்குக் கொண்டுவந்து அவர்கள் இங்கே செய்வார்களாக இருந்தால் கடன் மறுசீரமைப்பினை மிக இலகுவாகச் சமாளிக்கமுடியும்.
முதலாளிகளின் முதலீடுகளிலோ அல்லது அவர்களின் எந்த பணத்திலும் கைவைக்காமல் வெறும் தொழிலாளர்களின் பணத்தில் கைவைத்து கடன் மறுசீரமைப்பினை செய்வது இந்த மக்களை மிக மோசமாக வழிநடத்துவதற்கான முன்னுதாரணம் என்றுதான் நான் கூறுவேன்.
மக்களின் வாழ்வாதாரம்
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு செய்யப்படவேண்டிய விடையம் அதனை எப்படிச் செய்யவேண்டும் என்பதற்கு இந்த முதலாளித்துவம் ஒருபோதும் இடமளிக்காது வளமான நாடு ஏன் ஏழையாக இருக்கின்றது என்பதற்கு ஆட்சியாளர்கள்தான் பதில்சொல்லவேண்டும்.
இந்த பொருளாதாரத்தினை மறுசீரமைப்பதற்கோ அல்லது பொருளாதாரத்தினை மக்களின் வாழ்வாதாரத்தினை கட்டி எழுப்புவதற்கோ எந்த ஒரு வேலைத்திட்டமும் இதுவரைக்கும் எந்த ஒரு அரசும் வைக்கவில்லை.
இந்த கரும்பு செய்கையினையும் இவ்வாறுதான் பார்க்கலாம் முன்னால் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினை முன்னர் சொல்வார்கள்.
ஆராய்ந்து பார்க்கவேண்டும்
தெற்காசியாவின் ஒரு நரி என்று அதுமாதிரியான ஒரு நரிதான் இப்போதும் ஆட்சி செய்கின்றது.
இவர்களைப் பொறுத்தமட்டில் மேலோட்டமாக பார்க்கும்போது இப்போது இருக்கின்ற ஜனாதிபதி நல்லவர் இராணுவம் வைத்திருக்கும் காணிகளை விடுவிக்கின்றார்.
நல்லவர்
வல்லவர் என்றுதான் தெரியும். ஆனால் கரும்பு செய்கை என்று குடியேற்றுவதற்காக வவுனியா வடக்கில்
இவ்வளவு பெருந்தொகையான வனவளத்தினை அழிப்பதற்கும் தயாராக இருக்கின்றார் என்கின்றபோது இதன்
உள்நோக்கம் என்ன என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam
