வல்வைப்படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Photos)
வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 63 தமிழர்களின் 33ஆவது வருட நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வல்வெட்டித்துறை அமைப்பின் எற்பாட்டில், வல்வெட்டித்துறை ரேவடி கடற்பரப்பில் இந்த நினைவேந்தல் நேற்று(2) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட 63 தமிழ்களுக்கான முதல் ஈகை சுடரினை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் எற்றி வைத்துள்ளார்.
நினைவேந்தல் அனுஷ்டிப்பு
இதனை தொடர்ந்து ஏனைய பிரதிநிதிகளும் மலர் அஞ்சலி செலுத்தி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்த நினைவேந்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்தி- தீபன்

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
