டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!
அமெரிக்க டொலரின் ஸ்பொட் எக்ஸ்சேஞ்ச் ரேட்டின் (SPOT Exchange Rate) அதிகபட்ச பெறுமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
நேற்றைய தினம்(18.07.2023) அமெரிக்க டொலரின் 'ஸ்பொட் எக்ஸ்சேஞ்ச் ரேட்' 322.80 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 04, ஆம் திகதிக்கு பின்னர் பதிவான, அமெரிக்க டொலரின் ஸ்பொட் எக்ஸ்சேஞ்ச் ரேட்டின் (SPOT Exchange Rate) அதிகபட்ச பெறுமதி இதுவாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதேவேளை அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலையிலும் நேற்று (18.07.2023) மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நாணய மாற்று விகிதம்
அதன்படி, இலங்கை மத்திய வங்கி நேற்று வௌியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி , அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 314.95 ரூபாவாகவும் விற்பனை விலை 328.65 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நேற்று முன்தினம் (17.07.2023) டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் முறையே 313.29 மற்றும் 327.16 ரூபாவாக பதிவாகியிருந்தன.
இதற்கமைய நேற்று (18) அமெரிக்க டொலரின் 'ஸ்பொட் எக்ஸ்சேஞ்ச் ரேட்' 322.80 ரூபாய் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் 319.12 ரூபாவாக ஸ்பொட் எக்ஸ்சேஞ்ச் ரேட் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
விபத்து ஏற்பட்டு பரிதாப நிலைமையில் இருக்கும் தமிழ், அடுத்து என்ன... சின்ன மருமகள் சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? News Lankasri