தொடர் சரிவில் ரூபாவின் பெறுமதி..! பொருளாதார பாதிப்பு தொடர்பில் அமைச்சரின் முக்கிய அறிவிப்பு..
இலங்கை ரூபாய் பெறுமதி குறைவதால் பொருளாதாரத்திற்கு எந்தவித பாதகமும் இல்லை என நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் தொடர்ந்து பெறுமதி இழப்பை சந்தித்து வரும் வேளையில், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நிதி வழங்கல் தொடர்பான தீர்மானம்
இதேவேளை, QR குறியீட்டு முறையின் மூலம் எரிபொருள் விநியோகம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்கலைத் தடுக்கும் ஒப்பந்த திருத்தச் சட்டமூலம் மற்றும் பணப் பரிவர்த்தனை அறிக்கைச் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சபாநாயகர் இன்று(19) நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.
இதற்கமைய, பணப் பரிவர்த்தனை அறிக்கைச் சட்ட திருத்த மசோதாவின் இரண்டு பிரிவுகளை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை அவசியம் என உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் இதன்போது தெரிவித்துள்ளார்.
எனினும், பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்கலைத் தடுக்கும் ஒப்பந்த திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானதல்ல என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam