இளம் பெண் எடுத்த விபரீத முடிவு - விசாரணையில் சிக்கிய கணவன்
இரத்தினபுரி பகுதியில் 24 வயது பெண் ஒருவர் முச்சக்கர வண்டியிலிருந்து திடீரென பாய்ந்து படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
தனது கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர் செலுத்திச்சென்ற முச்சக்கர வண்டியிலிருந்தே பாய்ந்து உயிரிழந்துள்ளதாக இரத்தினபுரி, பனமுரா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் கணவர் கைது
இவ்வாறு உயிரிழந்த பெண், புலுதோட்டா பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 12 ஆம் திகதி தனது கணவருடன் பெற்றோரை பார்க்க சென்றபோது, கணவருடன் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், வாகனத்திலிருந்து குதித்துள்ளார்.
இதன்போது பலத்த காயமடைந்து நிலைமை கவலைக்கிடமாக இருந்த அப்பெண்ணை அவரது கணவர் பனமுரா மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், உடனடியாக காலி கராபிட்டிய போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைபெற்று வந்து சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெளியான காரணம்
தனக்கு தொடர்பில்லாத ஒரு பெண்ணுடன் திருமணத்திற்கு புறம்பான உறவு இருப்பதாக சந்தேகித்து, தனது மனைவி தன்னிடம் வாக்குவாதம் செய்து வாகனத்திலிருந்து பாய்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், கவனக்குறைவால் மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனைக்கு பின்னர் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என்று பனமுரா பொலிஸ் தெரிவித்துள்ளது.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 21 மணி நேரம் முன்
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam